724-இறைவன் தரும் அன்பு விருந்து |
இறைவன் தரும் அன்பு விருந்து இந்த உணவையே உண்ணக் கூடுவோம் அன்பு உறவினில் ஒன்று சேருவோம் தரணி வாழும் மாந்தருக்கு தனது உடலையே தாரை வார்த்துத் தந்தார் இயேசு அன்பின் நினைவிலே நம்முடலைத் தியாகம் செய்து வாழும் பொழுதிலே இந்த வையகம் வாழ்வுறும் தோழமை உணர்விலே யாருமிங்கு யாருக்கும் அடிமை இல்லையே சமத்துவமே விருந்து தரும் ஒரே கொள்கையே உயர்வு தாழ்வு பிரிவினையில் இறைவன் இல்லையே இதை உணர்ந்து உண்பதில் இன்பம் எங்குமே |