Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   723-இறைவன் என்னில் எழுந்தது  

இறைவன் என்னில் எழுந்தது - எனக்கு
என்னென்ன ஆனந்தம் - இந்த
ஏழையின் உறவினில் ஒன்றென ஆனது
என்னென்ன பேரின்பம் (2)

வானக வழியைக் காட்டிட வந்தார்
மனிதனின் உணவாக (2)
வாய்மையும் தூய்மையும் விளங்கிட எழுந்தார்
வாழ்வின் உணவாக - நல்ல
வாழ்வின் உருவாக அது வான்மட்டும் உயர்ந்தாக
என் ஆண்டவரே என் தேவனே
அன்பின் இயேசுவே எழுந்தாக

மாய இவ்வுலகில் நான் உழன்றாலும்
மேன்மைக்கு வழியாக (2)
தூயவர் திருமகன் புகழை எந்நாளும்
துதியுடன் நான் பாட - நல்ல
மெய்யுணர் வகுப்பாக என்னில் பேதைமை ஒழிந்தாக
என் ஆண்டவரே என் தேவனே
அன்பின் இயேசுவே எழுந்தாக




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்