722-இறைவன் எழுந்தார் |
இறைவன் எழுந்தார் நம்முள்ளமே இதயம் மகிழ்ந்தே பாடிடுவோம் இனிமை பொங்கும் அவர் உறவால் இனிய நல் உலகம் படைத்திடுவோம் இனிச் சோகமும் துயரமும் இல்லை எங்கள் நேசர் எம்மில் வாழ்கின்றார் அன்னியர் போலவே தொலைவில் நின்றோம் அன்பர் இயேசுவின் வரவில் இணைந்தோம் அன்பும் பாசமும் வாழ்வெனக் கொண்டு ஆண்டவர் அரசினை அகிலத்தில் அமைப்போம் இனிச் சோகமும் துயரமும் இல்லை எங்கள் நேசர் எம்மில் வாழ்கின்றார் வஞ்சமும் பகையும் வாழ்வில் அழிந்தது மன்னிப்பும் ஏற்பும் நிறைவாய் மலர்ந்தது சமத்துவப் பூக்கள் பாரினில் உதித்தது அயலானின் அன்பு வாழ்வாய் உயர்ந்தது இனிச் சோகமும் துயரமும் இல்லை எங்கள் நேசர் எம்மில் வாழ்கின்றார் |