Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   720-இறையமுதே எனில் வா  


இறையமுதே எனில் வா
எம் இதயத்தில் எழுந்திட வா
அன்பினால் நிறைந்திட வா - எங்கும்
அமைதியை அளித்திட வா
இறையமுதே எனில் வா

தேனமுதே எமைத் தேற்றிட வா
தேடி வந்தோர் குறை தீர்த்திட வா
தேவ நற்கருணையில் வாழ்ந்திட வா
தேவனே இயேசுவே எம் இறைவா

வானமும் வையமும் படைத்தவனே - உன்
வாழ்வினை எமக்காய் அளித்தவனே - 2
தன்னிகரில்லாத் தலை மகனே
தாழ்ந்துமைப் பணிந்தோம் மன்னவனே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்