Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   719-இருளகற்றும் ஒளிச்சுடராய்  
இருளகற்றும் ஒளிச்சுடராய்
வருவாய் என் இகமதிலே
மருளகற்றும் அருமருந்தை
தருவாய் என் அகமதிலே (2)

உடல் நலிந்து நலம் குறைந்து
திடம் இழந்து தவிப்பவர்க்கும்
தடம் புரண்டு திசை விலகி
பழமையிலே உழல்பவர்க்கும்
வளமுடன் நலமும் உளமதில் திடமும் - 2
மனமுவந்தே தினம் வரமருள்வாய்

பிரிவினைகள் நிதம் வளர்த்து
விரிவடையும் மனங்களிலே
பரிவிரக்கம் பிறர் நலன்கள்
சரிந்து வரும் இந்தத் தரணியிலே
சமத்துவ உணர்வை வளர்க்கும் இவ்விருந்தை - 2
தினம் எமக்கருளும் பரம்பொருளே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்