718-இராக தீபங்கள் |
இராக தீபங்கள் நான் ஏற்றினேன் ஜீவ பாதங்கள் பூச்சூடினேன் உணவாக உயிராக என்னில் வருவாய் நிறைவாக நினைவாக என்னில் வாழ்வாய் நிழல் தேடும் மானாக உனைத் தேடினேன் - அலை பொங்கும் என் இதயம் நீ குளிர்ந்திடச் செய்வாய் என் வாழ்வில் உன்வாழ்வு மலரச் செய்வாய் - 2 எந்நாளும் என்வாழ்வில் உணவாக வா 2 கடல் சேரும் நதியாக உனைச் சேர்ந்தேனே அலை பொங்கும் அருள் வெள்ளம் நீ என்னில் நிறைப்பாய் நான் என்றும் உன்பாதை தொடரச் செய்வாய் - 2 நீ என்றும் என்பாதைக் கொளியாக வா - 2 |