717-இயேசுவே வாருமே |
இயேசுவே வாருமே என்னையே தேற்றுமே - 2 உந்தன் சொந்தம் நானாக வேண்டுமே ஏழைகளின் கண்ணீரும் எளியவரின் கவலைகளும் - 2 மாறிடவே நான் என்றும் உழைக்க வேண்டும் நீ என்னில் வருகின்ற போது என் உள்ளம் அமைதி பெறும் நான் உன்னில் இணைகின்ற போது இம்மண்ணில் மகிழ்ச்சி வரும் உறவாட வா உருவாக்க வா உறவாட வா என்னை உருவாக்க வா நான் என்றும் உன் அன்பில் நிலைபெற வா - இயேசுவே நீ எந்தன் ஒளியாகும் போது என் உள்ளம் பார்வை பெறும் நான் உன்னைக் காண்கின்ற போது இம்மண்ணில் இல்லாமை நீங்கும் வாழ்வாக வா வழியாக வா வாழ்வாக வா எந்தன் வழியாக வா நீ என்னை நிதம் காக்கும் உணவாக வா - இயேசுவே |