Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   716-இயேசுவே என் ராஐனே  


இயேசுவே என் ராஐனே
வாழ்வை வழங்க வந்தாய்
தேவனே என தெய்வீகனே
வார்த்தை உலகில் வந்தாய் (2)

மன்னாவை உண்டார்கள் மடிந்தார்கள் - இத்
தண்ணீரைப் பருகியவன் தாகம் கொண்டான்
யேசுவே என்னை உண்பவன் வாழ்வடைவான்
என்னிடம் வருபவன் தாகம் கொள்ளான்
என்று சொன்னதால் நான் வந்தேன்
நீர் தந்ததால் வாழ்வைக் கண்டேன்
வாழ்வைப் பகிர்ந்தளிப்பேன்

வானமும் பூமியும் அழிந்து விடும் - இறை
வார்த்தையோ ஒரு நாளும் அழியாது
யேசுவே தன்னை உயர்த்துவோன் தாழ்வடைவான்
தன்னை தாழ்த்துவோன் உயர்வடைவான்
என்று சொன்னதால் நான் வந்தேன்
நீர் வந்ததால் அன்பைக் கண்டேன்
அன்பாய் வாழ்ந்திடுவேன்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்