Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   715-இயேசுவே என் மீட்பனே  


இயேசுவே என் மீட்பனே நீ வருகவே
இயேசுவே என் இறைவனே நீ வருகவே
வருகவே நீ வருகவே - 2 (2)

நீ என் இல்லம் வாழ - நான்
இன்றும் தகுதி இல்லை
உன் வார்த்தை ஒன்றே போதும்
என் ஆன்ம தாகம் தீரும்
நீயே என் வழி என் உண்மையும் உயிரும்
உம்மை உண்மையில் ஆவியில்
இன்றும் என்றும் கண்டேன் என் இறைவா

நீயே என் ஆயன் - என்னைத்
தூக்கி வளர்த்த மேய்ப்பன்
நீயே எனக்கு எல்லாம் - நான்
உம்மைப் பிரியமாட்டேன்
நீயே என் வழி என் உண்மையும் உயிரும்
உம்மை உண்மையில் ஆவியில்
இன்றும் என்றும் கண்டேன் என் இறைவா




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்