714-இயேசுவே என் நேசமே |
இயேசுவே என் நேசமே இதயம் வாருமே உந்தன் விருந்தில் அமரும் எனக்கு உம்மைத் தாருமே - நீர் என்னில் வளர்ந்திடுமே (2) பணிகள் புரிவேன் பகிர்ந்து தருவேன் உம்மைப் போலவே இவ்வுலகம் மகிழ்ந்திடவே (2) உம் திரு உடலை நான் உண்ணும் வேளை இன்பம் பொங்கிடுதே என்னோடு இணைந்தாய் இன்னருள் பொழிந்தாய் - 2 அன்பு பெருகிடுதே உம் உயிரில் கலந்திடுதே உலகப் பெருமை செல்வச் செழுமை எதுவும் நான் வேண்டேன் நீயென்னில் இருப்பதனால் (2) உம் திரு இரத்தம் பருகும் நேரம் வாழ்வு மலர்ந்திடுதே என்னோடு இணைந்தாய் இன்னருள் பொழிந்தாய் - 2 அன்பு பெருகிடுதே உம் உயிரில் கலந்திடுதே |