712-இயேசுவே என் தெய்வமே |
இயேசுவே என் தெய்வமே - என் நெஞ்சிலே வந்து தங்குவாய் (2) எந்தன் உள்ளம் நிறைந்து என்றும் எனது வழியை காட்டுவாய் (2) கல்லும் முள்ளும் நிறைந்த - எனது வாழ்வில் தடைகள் ஆயிரம் செல்லும் வழியில் துணையாய் - வந்தால் எந்த இடறும் போய்விடும் அச்சமின்றி பயணம் தொடர - அன்பில் நாளும் உன்னில் வளர நீயும் துணை வருவாய் உனது உடலும் குருதியும் - என் ஜீவ உணவாய் மாறட்டும் உந்தன் தியாகம் உண்மை - அன்பும் எந்தன் வாழ்விலும் நிகழட்டும் எனது நெஞ்சில் வந்த இறைவா - உனது பாதையில் நானும் நடந்து என்றும் பின்தொடர்வேன் |