Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   710-இயேசுவே என் இறைவனே  
இயேசுவே என் இறைவனே
இணையில்லாத தலைவனே
உயிராய் என்னில் எழுந்து வா
உறவாய் என்னில் கலந்து மகிழ வா...
நீயாக நான் மாறவா

உனது உடலை உண்ணும் நானும்
வளம் பெறுவேன் வாழ்வடைவேன் (2)
உன்னில் இணைந்து நான் மகிழுவேன்
உடைந்திடும் என் வாழ்வில் உயிரூட்டும் உணவே வா - 2
உறவின் பாலம் நான் அமைக்க வா இயேசுவே...இயேசுவே

உனது உதிரம் பருகும் நானும்
பலம் பெறுவேன் பலன் அடைவேன் (2)
என்னை இழந்து நான் மகிழுவேன்
உனக்காக நான் வாழ்ந்து உன்னோடு நான் சேரும் - 2
புனித நாளை நான் காணுவேன் இயேசுவே...இயேசுவே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்