Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   708-இயேசுவே எல்லாம் நீ  


இயேசுவே எல்லாம் நீ எனக்கு
என்னுடனே நீயிருக்க எல்லாம் நிறைவெனக்கு
என்றும் வாழ்வெனக்கு (2)

உயிரும் நீ உறவும் நீ - என்
உள்ளத்தின் உணர்வும் நீயே (2)
அருளும் நீ திருவும் நீ
புவி வாழ்வின் பொருளும் நீ
உயிரும் உறவும் உணர்வும் நீ
அருளும் திருவும் பொருளும் நீயே

நினைவும் நீ கனவும் நீ - என்
நெஞ்சின் நிறைவும் நீயே (2)
ஒளியும் நீ விழியும் நீ
நான் பார்க்கும் வழியும் நீ
நினைவும் கனவும் நிறைவும் நீ
ஒளியும் வழியும் விழியும் நீயே








 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்