700- |
இயேசுவே....உயிராய் வா...உணவாய் வா.... என் உணர்வாய் வா.... ஆ....ஆ....ஆ... உணர்கின்றேன் .... உணர்கின்றேன் .... இயேசுவே உன் அன்பை உணருகின்றேன் மார்பினில் சாய்ந்து உன் உணர்வுகளை மன்னவன் நேசத் துடிப்புகளை அனுதினம் நானும் உணர்ந்திடச் செய்திடும் இயேசுவே... உயிராய் வா.....உணவாய் வா.... என் உணர்வாய் வா.... இரவும் பகலும் பேசிடும் என் தெய்வமே இணையில்லா அருளை என்னென்று நான் சொல்வேன் பாறையில் வழிந்தோடும் நீருற்றாய் - உன் பரிவினால் என்னை முழுமையாய் நிரப்பிட இயேசுவே... உயிராய் வா.....உணவாய் வா.... என் உணர்வாய் வா.... வாழ்வென்றால் எனக்கு எல்லாமே நீர்தானையா வானத்துப் பறவைபோல் மகிழ்வோடு வாழ்ந்திடுவேன் உன்னோடு வாழ்ந்திடும் தருணங்களை - நான் பிறரோடு பகிர்ந்திட உன் அருள் தந்திட இயேசுவே... உயிராய் வா.....உணவாய் வா.... என் உணர்வாய் வா.... |