700- |
இயேசு தரும் விருந்திது உண்ண வாருங்கள் இறையரசின் உணவிது பகிர்ந்து கொள்ளுங்கள் வருவோம் சமத்துவ உறவிலே பெறுவோம் இறைவனின் அருளையே (2) பாலை நிலத்திலே பசியைப் போக்கவே மண்ணில் வந்தது மன்னா உணவு இங்கு வாடும் மக்களின் துயரைப் போக்கவே தேடி வந்தது இந்தத் தெய்வீக உணவு வருவோம் சமத்துவ உறவிலே ..(2) இறுதி இரவிலே இயேசு தந்த உணவு விடுதலையை தந்திட்ட பலியான உணவு இன்று வீதியெங்குமே வாழ்வு மலர்ந்திட ஆற்றல் ஆகிடும் இந்த உயிருள்ள உணவு வருவோம் சமத்துவ உறவிலே .. (2) |