Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   706-இயற்கையில் உறைந்திடும்  
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா - என்
இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு இன்று என்னை
அன்போடு காத்திடு என் தலைவா

உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ
மெழுகாகினேன் ஆ... திரியாகவா ஆ....
மலராகினேன் ஆ.... மணமாகவா

உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமா
குயிலாகினேன் ஆ.... குரலாகவா ஆ....
மயிலாகினேன் ஆ.... நடமாகவா





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்