Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   704-இதோ இறைவனின் செம்மறியே  
இதோ இறைவனின் செம்மறியே
இவரே நம் பாவம் போக்குகின்றார் (2)
அவனியில் அமைதியை ஆக்குகின்றார் - 2

கடவுள் நம்மோடு இருக்கின்றார்
நற்கருணை வடிவில் திகழ்கின்றார் (2)
உடலும் உள்ளமும் நலம் பெறவே - இவர்
உணவின் வடிவில் திகழ்கின்றார்
இதயத்தின் கதவுகள் திறக்கட்டுமே - அதில்
இயேசுவே அரசராய் அமரட்டுமே (2)

இன்பமும் துன்பமும் நமக்கு ஒன்றே
இவர் அன்பில் ஒன்றாய் இணைந்துவிட்டால் (2)
துன்பமும் பகைமையும் மறைந்துவிடும் - இறை
வல்லமை நம்மிடம் நிறைந்து விடும்
இதயத்தின் கதவுகள் திறக்கட்டுமே - அதில்
இயேசுவே அரசராய் அமரட்டுமே (2)





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்