703-இதயமே இதயமே என்னில் |
இதயமே இதயமே என்னில் எழுந்து வா உதயமாய் மனதினில் ஒளியை ஏற்ற வா (2) வாழ்விலே வலிமையாக வா வசந்தமாய் என்னில் வாழ வா எங்கும் எனதுள்ளம் நீயாக வேண்டும் தாங்கிடும் உனது கரம் எனைக் காக்க வேண்டும் நன்மை வடிவாக நாதா நீ வேண்டும் நாளும் புதுவாழ்வு நான் வாழ வேண்டும் துயரும் பிணியும் என்னை இங்கு சூழ்கின்றபோது துணையாக மருந்தாக நீ எனில் வர வேண்டும் வாழும் வாழ்வெல்லாம் நீயாக வேண்டும் வசந்தம் என் வாழ்வில் இணையாக வேண்டும் மீளா துன்பங்கள் எனை நீங்க வேண்டும் மீண்டும் உன் பாதம் நான் சேர வேண்டும் தாயும் தந்தை யாவுமே நீயாக வேண்டும் தயையோடு எனைநாளும் நீ நடத்திட வேண்டும் |