Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   702-இதயமே நீ தங்கும் ஆலயம்  
இதயமே நீ தங்கும் ஆலயம் - என்
இதயமே நீ தங்கும் ஆலயம்
உன் ஆலயம் பரிசுத்தமானது (2)

என்னோடு நீயிருந்தால் நெஞ்சுக்கொரு நிம்மதிதான்
உன்னோடு நானிருந்தால் உனக்கொரு சந்தோஷம் தான் (2)
இருவரும் இணைந்திருந்தால் எந்நாளும் கொண்டாட்டம் தான் - 2
உன்னோடு நானும் என்னோடு நீயும்
உன் இதயத்தில் நானும் என் இதயத்தில் நீயும்
ஒன்றித்து வாழ்ந்திருப்போம் ஓருடலாய் மாறிடுவோம்

உனக்கொரு ஆலயம் நான் அமைத்திடவே விரும்புகிறேன்
அங்கேயே வைத்து உன்னை ஆராதிக்க எண்ணுகிறேன் (2)
நான் ஒரு ஆலயம் என்பதையே மறந்துவிட்டேன் - 2
உன்னருகில் நானும் என்னருகில் நீயும்
உன்னன்பில் நானும் என்னன்பில் நீயும்
ஒன்றித்து வாழ்ந்திருப்போம் ஓருடலாய் மாறிடுவோம்







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்