Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   701-இதயம் எழுந்து வந்தவனே  

இதயம் எழுந்து வந்தவனே - என்
இருளைப் போக்க வந்தவனே
அமுதம் சுமந்து நின்றவனே - என்
ஆன்மா மீட்க வந்தவனே (2) இதயம்.....

இதுவரை வாழ்வில் இலக்கணம் இல்லை
இறைவா கரையாவாய்
இளமையின் துடிப்பில் உன் பதம் மறந்தேன்
எனக்குள் விதையாவாய் (2)
என் விரல் கொண்டே விழிகளைச் சிதைத்தேன்
பார்வைக்கு ஒளியாவாய்
என் பரமே உன்னிடம் வந்தேன்
எனக்குள் நீயாவாய்
என்றும் எனக்குள் நீயாவாய்

ஓவியப் பிழையாய் என் முகம் இழந்தேன்
இறைவா எனை வரைவாய்
ஓடிய மட்டும் ஓடி நான் நின்றேன்
இறைவா முடிவாய் வா (2)
உன் உடல் தாங்கி பாவி நான் நின்றேன்
இறைவா எனில் வருவாய்
எனக்கொரு வாழ்க்கை இருட்டினில் கிடக்க
ஜோதியை ஏற்றிட வா - அருள்
ஜோதியை ஏற்றிட வா






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்