700-இதயத்திலே கோவில் |
இதயத்திலே கோவில் செய்தேன் எழுந்து வாரும் தேவா என் ஆயுட்காலம் முழுவதுமே உம்முடன் வாழ்வது மேலானது (2) உம் புகழை எடுத்துரைக்க ஏழிசை ராகங்கள் இசைத்தேன் (2) உம் நாமம் சொல்லாத பொழுதெல்லாம் வீணான நாள் தானே என் தலைவா (2) என் வாழ்வும் நீர் தந்த கொடையல்லவா தெய்வீக இசையால் உம் பெயர் சாற்றுவேன் வானமே இடிந்து விழுந்தாலும் வார்த்தையில் மாறாத திருமகனே கங்கை நதி திசை மாறலாம் - உம் கருணையும் அன்பும் மாறாதையா உயிருள்ள வரையில் உம் அருளை உலகினர் நடுவினில் உரைப்பேன் (2) பொன்னான திருநாமக் கீதத்தினை சங்காக ஊரெங்கும் முழங்கிடுவேன் - உம் (2) என் தேவன் உமது பெருமைதனை எக்காளத் தொனியில் எடுத்துரைப்பேன் வானமே இடிந்து விழுந்தாலும் வார்த்தையில் மாறாத திருமகனே கங்கை நதி திசை மாறலாம் - உம் கருணையும் அன்பும் மாறாதையா |