Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   699-இதய வாசல் திறந்து  


இதய வாசல் திறந்து வைத்தேன்
உதயமாகி என்னில் வந்தாய்
மகிழ்கின்றேன் ஆ மகிழ்கின்றேன் ஆ
கவலைகளே என்னில் இல்லை

எனை மறந்து உனை நினைந்து உளம் உருகி நின்றேன் - 2
அன்பன் உந்தன் உறவில் கண்ட சுகமோ கோடி - 2
அன்பின் சுனையில் மூழ்கி அடிமையானேன் தேவா
வாழ்வின் நிறைவை உன்னில் கண்டேன் - 2

கொடிகளிலே பல கிளைகள் கிளைகளிலே கனிகள் - 2
கொடியைப் பிரிந்த கிளைகள் கனியைத் தருதல் உண்டோ - 2
பிரிந்த நான் இன்று உன்னை இறுகத் தழுவிக் கொண்டேன்
வாழ்வின் உயிரே உன்னைப் பிரியேன் - 2





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்