698-இதய கீதம் இசைத்து |
இதய கீதம் இசைத்து வந்தேன் இதய தெய்வமே இதயம் மகிழ உன்னை அழைத்தேன் இதய தெய்வமே இரங்கி வா இனிதே வா என்னில் வா எழுந்து வா (2) நீரின்றி வாடும் செடியைப் போல நீயின்றி என் வாழ்வு வாடிப்போகும் (2) கார்மேகம் கண்டு களித்திடும் மயில் போல் - 2 கலக்கம் நீக்கி களித்திட வா ஓசை இல்லாத வெண்கலம் போல நீ இல்லா வாழ்வும் மாறிப்போகும் (2) ஆதவன் கண்டு மலர்ந்திடும் மலர் போல் - 2 நறுமணம் வீசி மகிழ்ந்திடவா |