697-இதயக் கதவை திறந்து |
அன்பே அருளே இறைவா போற்றி அனைத்தும் நீயே உன் தாள் போற்றி நிறைவே நெறியே இறைவா போற்றி விடுதலை அளிக்க விரைவாய் போற்றி இதயக் கதவை திறந்து வைத்தேன் இனிமை நிறைக்கும் யேசுவே உதயம் தேடும் நேரமெல்லாம் உந்தன் உறவை நாடுவேன் யேசுவே... யேசுவே... யேசுவே... யேசுவே... யேசுவே... யேசுவே... ஏழை மனிதரில் உன் முகம் காணவே ஏங்கிடும் இதயத்தில் உன்னருள் நிறைக்கவே (2) உண்மை அன்பு மாண்பு ஓங்கிட... உந்தன் அன்பில் தியாகமாகுவேன் புதிய அன்பு வெள்ளம் எங்கும் பொங்கிப் பாயும் நேரமே புதிய உலகம் மலருமே இறைவன் அரசும் வளருமே நீதி தேடிடும் அன்பின் பணியிலே சமத்துவ உறவினை சத்தியமாக்குவேன் (2) மனித நேயம் காக்கும் பொறுப்பிலே புனிதப் பயணம் தினமும் செல்லுவேன் நீதி நேர்மை உணர்வு கொண்டு இறைவன் வழியை நாடுவேன் புதிய உலகம் காணுவேன் இறைவன் அரசில் வாழுவேன் |