Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   696-இதய வேந்தே வா  



இதய வேந்தே வா
என் இன்ப மன்னவா

கண்ணில் நீ நிறைந்தாயே - நான்
மண்மீது மடிகின்றேன்
என்னோடு நீ சேர உன்னோடு நான் வாழ
பண்பாடி அழைக்கின்றேன்

பாரில் எனைத் தேடினாய் - நான்
பாதையில் அழுகின்றேன்
என் உள்ளம் நீ தேட உன் உள்ளம் நான் தேட
இந்நாளில் கண்டடைவேன்

ஆயிரமாயிரமாய் - நான்
ஆசைகள் வளர்த்தேனே
என் ஆசை தீர்ந்திடும் எந்நாளும் வாழ்ந்திடும்
என் ஆயன் உனைக் கண்டேன்





இதய வேந்தே வா .. என் இன்ப மன்னா வா.. 2

அப்பதில் நீ எழுந்தாய் நான் ஆவலாய் வருகின்றேன் - 2
என்னோடு நீ சேர உன்னோடு நான் வாழ
பண்பாடி அழைக்கின்றேன் -2

பாரில் உனைத்தேடினேன் பலி பீடத்தில் உணவாகினாய் - 2
என்னுள்ளம் நீ தேட உன்னுள்ளம் நான் வாழ
பண்பாடி அழைக்கின்றேன் -2

ஆயிர மாயிரமாய் நான் ஆசைகள் வளர்த்தேனே - 2
உன் ஜீவ பந்தியில் நான் உண்னும் நேரத்தில்
நிறைவாழ்வைக் கண்டுகொண்டேன் - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்