Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   695-இதய தாகம் இருப்பார்  


இதய தாகம் இருப்பார் வருக
இதயம் குளிர ஈவோன் நிறைய
தாகம் இருப்பார் வருக
குளிர ஈவேன் நிறைய

சுமந்து வந்திடும் சீலோ தண்ணீர்
உமக்கு இருந்தும் உதவாத் தாகம்
உவந்து ஊற்றும் ஊற்றுத் தண்ணீர்
உவமையாகும் உரைப்பீர் உண்மை

பிறந்து வந்த பரனிடம் வந்தே
திறந்த உள்ளம் நிறைவு கொள்வீர்
உடலின் தாகம் உலகம் அறியும்
உள்ளத்தின் தாகம் எவரும் அறியார்

பொருளும் பொன்னும் போக்காத்தாகம்
இதயம் தேடும் இறைவன் நாமே
வருக வருக வளமாய்ப் பெறுக
பெருகும் இன்பம் பெற்றே வாழ்க





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்