Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   694-இதய அமைதி பெறுகின்றோம்  

இதய அமைதி பெறுகின்றோம்
இந்த விருந்திலே
இனிய வரங்கள் பெறுகின்றோம்
இறைவன் உறவிலே

மனதில் தோன்றும் கவலைகள்
மறையும் இறைவன் வரவிலே

உருகும் உள்ளம் மலர்ந்திடும்
உயர்நற் கருணைப் பந்தியிலே
பெருகும் கண்ணீர் உலர்ந்திடும்
இறைவன் கருணைக் கரத்திலே

பழைய வேத வனத்திலே
பொழிந்த மன்னா மறையவே
புதிய வேத மாந்தரின்
புனித மன்னா இறைவனே

உலக செல்வம் மறைந்திடும்
உறவு ஒருநாள் மறந்திடும்
உடைந்த மனித வாழ்விலே
உயிரைத்தரும் நற் கருணையே

ஆயன் உலகில் கிறிஸ்துவே
அவர்தம் ஆட்டுக் கிடையிலே
புனித வாழ்வு அடையவே
புசிக்கத் தந்தார் உடலையே

அன்பு மேகம் தவழ்ந்திடும்
துன்ப சோகம் விலகிடும்
இதயத் தாகம் தணியவே
இறைவன் தந்தார் உணவிலே




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்