Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   693-இணைவோம் இணைவோம்  
இணைவோம் இணைவோம்
இயேசுவில் இணைவோம்
இதுதான் தருணம் இணைந்திடுவோம் (2)

பகிர்வினில் இணைவோம்
பலியினில் இணைவோம்
பரமன் பாதையில் இணைந்திடுவோம் (2)

பகைமை மறந்து நாம் இணைவோம் - தூய
பாச பலியினில் இணைவோம்
மகிமையில் இணைவோம்
மகிழ்ச்சியில் இணைவோம்
மன்னன் பாதையில் இணைந்திடுவோம்

துன்ப நேரத்தில் இணைவோம் - துயர்
தோள் கொடுத்திட இணைவோம்
தாய்மையில் இணைவோம்
தாழ்வினில் இணைவோம்
தலைவன் பாதையில் இணைந்திடுவோம்

தூய செயலினில் இணைவோம் - எம்மைத்
தூய்மையாக்கிட இணைவோம்
பணியினில் இணைவோம்
பாவினில் இணைவோம்
தூயவன் பாதையில் இணைந்திடுவோம்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்