692-ஆனந்தம் என் உள்ளம் |
ஆனந்தம் என் உள்ளம் காணும் இனி அணையாது புது வாழ்வின் தீபம் (2) அன்போடு என் இயேசு எனைத் தேடி வந்தார் இனி அவரோடு நான் என்றும் வாழ்வேன் மலைமீது இராயப்பர் பேரின்பம் கொண்டார் அத்தி மரம் மீது சக்கேயு மகிழ்ச்சியைக் கண்டார் எம்மாவுஸ் சீடர் உம்மை அழைத்தாரே தங்க நீர் என்னோடு வந்தாலே மகிழ்ச்சி மழை கொண்ட குளம் நீக்கும் குடிநீரின் தாகம் இனி மறையும் என் பகிராத சுயநலப் பாவம் மழைக்காற்றில் மரம் தன்னில் தலையாட்டும் இலையாய் என் மன வீட்டில் நீ வந்தால் இன்பம் |