691-ஆனந்த மழையில் நானிலம் |
ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் வருகின்றார் ஆயிரம் நிலவொளியோ - என்னை ஆண்டிடும் இறையரசோ அவனியை மாற்றிடும் அருட்கடலோ மன்னவனே என் இதயம் பொன்னடி பதிக்கின்றான் விண்ணகமே என் இதயம் அன்புடன் அமைக்கின்றான் இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே பண் பாடவோ என்றும் கொண்டாடவோ மலர்கின்ற புது வாழ்விலே - இனி சுகமான புது ராகமே என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 2 சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தானே காற்றினிலே நறுமணமாய் கலந்தெனில் நிறைந்தானே என்னில் ஒன்றாகினான் நான் நன்றாகினேன் பணி வாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன் மலர்கின்ற புது வாழ்விலே - இனி சுகமான புது ராகமே என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 2 |