690-ஆயிரம் பாடல் பாடுவேன் |
ஆயிரம் பாடல் பாடுவேன் ஆனந்தம் வாழ்வில் காணுவேன் - 2 அன்புக்கு அர்த்தங்கள் சொல்லுவேன் அன்பர் அன்பைப் பாடுவேன் - 2 தேவையில் தேடினேன் தேற்ற என்னில் வருகிறார் வாழ்க்கையில் வாடினேன் வாழ்த்த என்னில் வருகிறார் - 2 நான் செல்லும் பாதையில் தடைபடும் வேளையில் வழிகாட்டி ஒளிகாட்ட வருகிறார் என்னில் வருகிறார் கலங்கிடும் வேளையில் காத்து என்னை ஆள்கிறார் காரிருள் நீங்கவே கருணை தேவன் வருகிறார் - 2 வழியினில் துணைவராய் வாழ்வினில் தலைவராய் உறவாக நிறைவாக வருகிறார் என்னில் வருகிறார் |