689-ஆண்டவரின் திருவிருந்து |
ஆண்டவரின் திருவிருந்து புனிதமானது அதை உணர்ந்து பகிர்ந்து வாழ்வதில் தான் அர்த்தம் உள்ளது (2) அன்பு நீதி சமத்துவத்தில் நிலைத்திடும் போது (2) இறைவன் ஆசி நம்மிடையே இனிதே மலரும் ஆண்டவர் ஆசி வழங்கி நம்மைக் காப்பார் (2) அன்பு முகம் காட்டி நமக்கு இரக்கம் தருவார் ஆண்டவர் திருவுளம் நம் இதயத்தை நோக்கி (2) அமைதியில் வாழ்ந்திடவே அருளச் செய்வார் (2) வானகத் தந்தை பரிவு பொழிவது போல (2) பிறரில் இரக்கம் கொண்டு வாழ்ந்திட வேண்டும் இருக்கும் உடமைகளைப் பிறரிடம் பகிர்ந்து (2) இறைவன் திருவடியில் செல்வத்தைச் சேர்ப்போம் - (2) |