688-அன்பே எனையாள வாராய் |
அன்பே எனையாள வாராய் - 2 அருள் மழை என் வாழ்வில் பொழிவாய் ஆ... ஆ... உண்மை வழி என்னை நடத்த வாரும் உன்னதனே உனில் நான் வாழ - 2 என் இதயம் நீ எழுவாய் உன்னில்லம் நான் வாழ ஏங்கும் எந்தன் இதய வேந்தே - அன்பே... இறையன்பை நான் சுவைத்திடவே இன்பமயம் என்னில் பொழிந்திடவே - 2 இயேசுவே நீர் எழுந்தருள்வீர் மாசு நீங்கி நான் வாழ என்றும் வாழும் எந்தன் இறைவா உன்னுடனே நான் உறவாட உவந்து வந்தேன் நான் உனைக் காண - 2 நீயின்றி நான் இல்லை நான் என்றும் உன் பிள்ளை காலமெல்லாம் காப்பீர் தேவா |