Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   687-அன்பே என்றானவா  


அன்பே என்றானவா.....
என் எண்ணம் நிறைவானவா
உன் மேன்மை வானம் என்றாகினாலும்
என் ஏழ்மை குறை தீர்த்தவா - ஆ... ஆ...

வளம் காய்ந்து நிழல் தேடும் நேரங்களில்
வளமோடு எனைச் சூழும் நதியாகிறாய்
பிரிந்தோடி மனம் வாடும் வேளைகளில்
எனைத் தேற்றும் புதுவாழ்வு மழையாகிறாய்
மலை போன்ற உன் அன்பு முன்னாலேதான்
என் தாழ்வை உன் மாண்பை நான் காண்கின்றேன் - 2

உன் பாத நிழல் போதும் என ஏங்கினேன்
உன் நெஞ்ச மலராலே எனை மூடினாய்
கண் பார்வை அருள் போதும் என நாடினேன்
என் பாதை வழி செல்லும் துணையாகினாய்
மண்மீது காலூன்றும் தொடுவானமாய்
என் மீது நீ வந்து நானாகிறாய் - 2




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்