686-அன்பு மனங்கள் வாழ்க |
அன்பு மனங்கள் வாழ்க அமரும் விருந்து வாழ்க சொந்தமாகும் உறவினிலே சுடரும் யேசு வாழ்க ஏழை உள்ளமெங்கும் எழுச்சி கீதம் முழங்கும் எழுந்து நிமிர்ந்து உயரும் நல்ல நேசக்கரங்கள் இணையும் பார்வை உயர்ந்திட உயர்ந்திட பாசங்கள் மலர்ந்திடும் மலர்ந்திடும் பகிர்ந்திடும் விருந்து வாழ்க உயர்ந்திடும் மனிதம் வாழ்க சுமைகள் தாங்கும் மனங்கள் விரிந்து வானில் பறக்கும் இமைகள் இழந்த விழிகள் கவலை நீங்கி களிக்கும் இயேசுவில் இணைந்திட இணைந்திட இன்னல்கள் தீர்ந்திடும் தீர்ந்திடும் நலம் தரும் விருந்து வாழ்க நானிலமே வாழ்க பாதை தேடும் பொழுதில் பசுமை வாழ்வில் தெரியும் எழுச்சி ஓங்கும்போது - ஒரு புதிய உலகம் பிறக்கும் பணியில் கலந்திட கலந்திட புதுயுகம் மலர்ந்திடும் மலர்ந்திடும் மலர்ந்திடும் கனவுகள் வாழ்க புலர்ந்திடும் அரசு வாழ்க |