Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   685-அன்பில் விழைந்த அமுதமே  
அன்பில் விழைந்த அமுதமே
என்னில் மலர்ந்த தெய்வமே
உயிரில் கலந்த ராகமே --
உறவில் எரியும் தீபமே (2)
தேவனே இறைவனே
தேடி வந்த தெய்வமே

தனித்துச் செல்லும் வழிகளெலலாம்
தலைவன் உனையே தேடவே
தனித்து ஏங்கும் விழிகள் எல்லாம்
தாகம் கொண்டு நாடவே
அணைத்துச் செல்லும் அன்னையாகி
அழைத்துச் சென்றாய் தெய்வமே
அன்பனே நண்பனே
என்னை ஆளும் தெய்வமே

கல்லும் முள்ளும் காடும் மலையும்
கடந்து செல்லும் வேளையில்
பொழுது சாய்ந்து புகழும் ஓய்ந்து
வாழ்க்கைப் படகும் மூழ்கவே
சின்ன எனது இதயம் தனை நீ
சிறகில் அமர்த்தி விரைகின்றாய்
அன்பனே நண்பனே
என்னை ஆளும் தெய்வமே

தந்தை தாயும் சொந்தம் யாவும்
தொலைவு தூரம் போயினும்
பந்தமின்றி பாவியானும்
பரிதவித்தே வாடினேன்
அந்த நேரம் வந்து நீயும்
நொந்த என்னைத் தேற்றினாய்
அன்பனே நண்பனே
என்னை ஆளும் தெய்வமே

நிலவும் மலரும் அலையும் புயலும்
தூங்கும் பொழுதேன் விழிக்கின்றாய்
கலங்கும் இதயம் பொழியும் கண்ணீர்
துடைக்க நீயேன் விரைகின்றாய்
அன்பு மழையில் அமுத மொழியில்
அள்ளி அணைத்தேன் நடக்கின்றாய்
அன்பனே நண்பனே
என்னை ஆளும் தெய்வமே





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்