Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   683-அன்பனே என்னுள்ளம்  


அன்பனே என்னுள்ளம் எழுந்திட வா
என் இயேசுவே என் ஜீவன் நீயல்லவா (2)
காலங்கள் மாறினும் கோலங்கள் மாறினும்
நம் சொந்தம் என்றென்றும் மாறாதய்யா (2)

வாழ்வில் இனிமை நீயல்லவா - உன்
வாசல் தேடி வருகின்றேன் (2)
கலங்கரை தீபம் நீயல்லவா
இருளை நீக்கும் ஒளியல்லவா
என் உயிரே உறவே எனைத் தேற்ற வா

அன்பின் ஊற்றே நீயல்லவா - உன்
ஆற்றல் எனைத் தாங்க விழைகின்றேன் (2)
ஆறுதல் சொல்லும் மொழியல்லவா
சிறகினில் அணைக்கும் தாயல்லவா
என் உயிரே உறவே எனைத் தேற்ற வா




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்