682-அருள் பொழி அண்ணலே வா |
அருள் பொழி அண்ணலே வா இன்பம் தரும் அன்பனே வா என்னுள்ளத்தின் அன்பைக் கவர்ந்த ராஜனே தென்றல் இன்பம் திழைத்திடும் வெண்ணிலவின் தண்ணொளி போல் இன்பம் தரும் இயேசுநாதா என்னுள்ளத்தில் இறங்கிவா இன்பம் தரும் இயேசுநாதா என்னுள்ளத்தின் அன்பைக் கவர்ந்த ராஜனே துன்பம் பல சூழ்ந்திடவே உன்னையே நான் நாடி நிற்க கட்டி என்னைத் தேற்ற வாராய் விண்ணவரின் போஜனமே இன்பம் தரும் இயேசுநாதா என்னுள்ளத்தின் அன்பைக் கவர்ந்த ராஜனே வா வா என்றழைக்கும் ஏழை எந்தன் குரல் கேட்டு இன்பம் தரும் இயேசுநாதா என்னுள்ளத்தில் இறங்கிவா இன்பம் தரும் இயேசுநாதா என்னுள்ளத்தின் அன்பைக் கவர்ந்த ராஜனே |