682-அருள் தேவன் எழுகின்ற நேரம் |
அருள் தேவன் எழுகின்ற நேரம் ஆனந்த ராகங்கள் பாடும் இறையாற்றல் அருளாலே உருவாகும் புது வாழ்வு - 2 உளமெல்லாம் நிறைவாகுமே தேவா உலகெல்லாம் மகிழ்வாகும் அமுதூட்டி உயிர் காக்கும் தாயன்பு குறைந்தாலும் உயிரூட்டும் உமதன்பு குறையாதையா (2) மகிழ்வூட்;டும் விருந்தாக ஆ... ஆ... ஆ... எழுந்திங்கு நீ வந்தாய் நிறைவூட்டும் உமதன்பின் நானென்றும் (உயிர் வாழ்வேன்) - 2 நானிலம் எங்கிலும் அன்பெனும் தீபங்கள் ஒளி சிந்தும் உளமதன் மகிழ்வினில் உறவெனும் நாதங்கள் உருவாகும் உயிரினில் உறவினில் கலந்திடும் நாதா காலங்கள் தோறும் பாடிடுவேன் (நான் பாடிடுவேன்) அலையாக துன்பங்கள் சூழ்கின்ற பொழுதெல்லாம் தேவா நின் திருப்பாதம் சரணடைந்தேன் அரணாக நீ நின்று ஆ... ஆ... ஆ... கனிவாக எனைக் காப்பாய் பிரியாத உறவாகி உளமெல்லாம் மகிழ்வாய் மனதினில் உறுதியாய் மாபரன் உன் வழி சென்றிடுவேன் நீதியின் தீபங்கள் பாரினில் ஏற்றி மகிழ்ந்திடவே விடுதலை கீதங்கள் ஊரெல்லாம் முழங்கியே நாளெல்லாம் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன் (நான் வாழ்ந்திடுவேன்) |