Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   681-அருள் தீபமே அணையா விளக்கே  

அருள் தீபமே அணையா விளக்கே
என் வாழ்வில் ஒளியேற்றவா
உன் பாதத்தில் விளக்கேற்றினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு
நான் வேண்டினேன் (2)

போராடும் வாழ்க்கை சுமையோடு நின்றேன்
சுமைதாங்கி உன்னிடத்தில் அமைதி தேடி வந்தேன்
வறுமை நீக்க வா பிணியைப் போக்க வா என் தேவனே
பாடினேன் தேடினேன் உனை நாடினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு
நான் வேண்டினேன் (2)

பொருள் தேடி அலைந்தேன் உனை நினைக்க மறந்தேன்
சுக போகத்தில் மூழ்கி இறைவன் அருளை இழந்தேன்
அமைதி பறந்ததே பகலும் இருண்டதே என் வாழ்விலே
பாவி என் பாவங்கள் நீ போக்கவே
கரம் நீட்டி வரம் கேட்டு
நான் வேண்டினேன் (2)




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்