Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   679-அருள் தரும் திருவிருந்து  


அருள் தரும் திருவிருந்து இறைவிருந்து
இதை உணர்ந்து அருந்திட வா நீ விரைந்து (2)

இறைமகனே கல்வாரியில்
தனைக் கொடுத்த அதே நிகழ்வு (2)
நமையும் பிறர்க்காய் - 2 வாழ அழைக்கும்

உறவுகளை உரிமைகளை
வளரச்செய்யும் அருமருந்து (2)
உண்மை உறவில் - 2 வாழ அழைக்கும்

எளியவரை உயர்த்திடவே
ஏற்ற மிகுத் திரு உணவு (2)
அன்பைப் பொழிந்து - 2 வாழ அழைக்கும்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்