678-அரவணைக்கும் அன்பு தெய்வமே |
அரவணைக்கும் அன்பு தெய்வமே இயேசுவே - உன் அடியெடுத்து நான் செல்லும் பாதைகளெல்லாம் என்னோடு தொடர்ந்து அரவணைக்க வேண்டுமே சோகங்கள் பலகோடி சூழ்ந்திடும் வேளையில் உன் சிறகினுள் எனை மூடி அடைக்கலம் தரவேண்டும் உந்தன் புது உறவிலே கவலையெல்லாம் மறந்து - 2 உலகெல்லாம் நற்செய்தி பணியினைத் தொடர்வேன் வாழ்வினில் தடைகள் தொடர்ந்து வந்தாலும் உன் வலிமைக் கரமென்னில் இருந்திட வேண்டும் உந்தன் நல் துணையிலே பாதையினை தெரிந்து - 2 எந்நாளும் நிறைவாழ்வு பயணம் செல்வேன் |