676-அமுதே வழியே அகல் |
அமுதே வழியே அகல் விளக்கே மரி என்னும் மலரின் நறுமணமே எண்ணரும் இதயம் பண்பல இசைத்து விண்ணகம் நோக்கி விழித்துன்னை வாழ்த்த உண்டு மகிழ்வோம் உம் திரு உடலை கண்ணிமைப் பொழுதும் பிரிந்திடோம் உம்மை அழிவுக்கு வழியை விளையும் எம் உள்ளத்தை தலை கொடுத்தேனும் காக்க வந்தாயோ என்றென்றும் வாழும் விண்ணக வாழ்வை உன்னை அன்றி எமக்கு எவர் தர இயலும் இருளில் நின்றேன் விழியைத் தந்தாய் யாரெனக் கேட்டேன் ஒளியெனச் சொன்னாய் பிரிவில் தவித்தேன் வழியில் வந்தாய் ஏனெனக்கேட்டேன் துணையெனச் சொன்னாய் |