671- |
அப்பமிது அப்பமிது அப்பாவில் இணைக்குது சின்னஞ்சிறு அப்பமிது சிந்திக்க வைக்குது வெள்ளை நிற அப்பமிது விண்ணகம் தருவது ஆசையைத் தகர்த்து ஆனந்தம் தரும் தெய்வீக அப்பமிது - 2 சுமைகளை வருத்தியே சுமந்திடும் போதிலே தாங்கிடும் மனம் தரும் தெய்வீக அப்பமிது வலுவெல்லாம் இழந்து நான் வீழ்ந்திடும் போதிலே இளைப்பாறச் செய்திடும் வானக அப்பமிது என் சுமை எளிதென என் நுகம் இனிதென - 2 தேறுதல் தரும் அப்பமிது - 2 நோய்களால் நொடிந்திடும் வேதனை வேளையில் நம்பியே சுகம் பெற அழைத்திடும் அப்பமிது அலகையின் சோதனை அனைத்தையும் எதிர்த்து நான் துணிவுடன் வென்றிட பலம் தரும் அப்பமிது என் சுமை எளிதென என் நுகம் இனிதென - 2 ஆறுதல் தரும் அப்பமிது 2 |