672-அண்ணல் இயேசு |
அண்ணல் இயேசு என்னில் வர என்ன தவம் செய்தேனோ என்னில் அவர் கண்ட சுகம் என்னவோ எந்தன் உள்ளமே நீ நன்றி பேசு சொந்தமாக்கினார் உன் நல்ல யேசு எந்தத் துன்பம் என்னைச் சூழ்ந்து வந்த போதும் அஞ்சிடேன் சோலை மலர் பூக்குமோ மேகம் மழை பெய்யுமோ சூரியன் இல்லாமலே சோகம் சூழ்ந்த வாழ்விலே பாவம் தோய்ந்த நெஞ்சிலே இறைவன் அருள் வேண்டும் கலங்காதே என்று கண்ணீர் துடைத்து புதுவாழ்வு எனக்களித்தார் சேற்றில் நின்று என்னையே தேற்றி அரவணைத்தார் என் பிழை எண்ணாமலே - 2 எனில் சேர்ந்து வாழவே இன்ப வானில் சேர்க்கவே அன்பின் விருந்தளித்தார் என் ஆயன் யேசு எல்லாமே செய்தார் என்வாழ்வில் குறை இல்லையே |