Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள் உயிரின் உயிரே இறைவா  

உயிரின் உயிரே இறைவா
உணவின் வடிவில் வருவாய்
வாடும் உள்ளம் என்னைத் தேற்ற வா
வாழ்வின் பாதை நாளும் மாற்ற வா
உன்னருள் வருகையில் உலகமே மகிழ்ந்திட

உலகம் வாழ நீயும் உந்தன் உடலைச் சிதைத்து
உறவுப் பலியாய் உன்னைத் தந்தாய்
உனது வழியில் நானும் எனது வாழ்வை உடைத்து
உலகை மாற்றும் துணிவைத் தாராய்
உன் அன்புப் பாதைகள் என் வாழ்வின் பாடங்கள்
உன் அருள் வார்த்தைகள் என் வாழ்வின் தேடல்கள்
உலகெலாம் மகிழ்ந்திட உள்ளத்தில் நீ வா

கருணை மொழிகள் பேசி கனிவுச் செயல்கள் காட்டி
கடவுள் ஆட்சி கனவைத் தந்தாய்
காணும் உயிர்கள் யாவும் கடவுள் உருவைக் காணும்
புதிய நெறிகள் வகுத்துத் தந்தாய்
இறையாட்சிக் குடும்பமாய் இவ்வுலகம் அமைந்திட
இங்கு பகைமை அழிந்திட நல் பகிர்வு வளர்ந்திட
நீதியின் பாதையில் மானுடம் வாழ்ந்திட




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்