காணிக்கைப்பாடல்கள் | -வாழ்வின் நாயகனே |
வாழ்வின் நாயகனே நான் வாழ்ந்ததை தர வந்தேன் காலடி பணிந்து முன்னே காணிக்கை தருகின்றேன் கருணை பொழிந்து என்னை ஏற்பாய் திறந்த மனதுடன் பரந்த அன்புடன் பகைவரை ஏற்றுக்கொண்டேன் நிறைந்த மகிழ்ச்சி கண்டேன் அது மன்னிப்பில் எழக் கண்டேன் சிறந்த மனிதர்களாய் வாழந்திட நினைத்தேன் முயற்சியைத் தருகின்றேன் இறந்தேன் எனக்குள் தன்னலம் அழித்து அதனைக் கொண்டு வந்தேன் - நான் மரமாய் வளர விதையும் தன்னை அழிக்கும் நிலை கண்டேன் உரமாய் ஆகி விட்டேன் பிறர் வாழ்ந்திட என்னைக் கொடுத்தேன் பரமே உந்தன் சுரமாய் இணைந்து பலியினைத் தருகின்றேன் சிரமே பணிந்தேன் அன்பின் மனிதனாய் என்னை மாற்றிடுவாய் - நீ |