காணிக்கைப்பாடல்கள் | -உழைப்பாலே நீர் தந்த பொருளோடு |
உழைப்பாலே நீர் தந்த பொருளோடு வந்தேன் எனையும் பலியாக்குவாய் எனதன்பைப் பிறர்க்காகப் பகிர்ந்திட வந்தேன் கனிவான இதயம் தருவாய் என்னில் என்ன கண்டாய் இறைவா இறைவா என்னைத் தேர்ந்து கொண்டாய் இறைவா இறைவா நானே நீ தேர்ந்த ஆடல்லவா - 2 நான் என்னாலே ஈன்ற காணிக்கை தந்தேன் - 2 பலிக்கது தகுந்தவையோ - நான் - 2 நீ தந்த உடலும் நீ தந்த உயிரையும் உனக்கெனப் படைக்க வந்தேன் இது போதுமோ என் இயேசுவே குறையன்றி யாருக்கு நான் என்னைத் தருவேன் இறைவா இறைவா இறைவா இறைவா நான் உன்னாலே என்றும் நிறைவாக வேண்டும் படைத்திடும் பலி வழியில் - நான் - 2 அருள் கூறும் இறைவா புதுவாழ்வு தருவாய் நான் தரும் இதயத்திலே உனதல்லவோ என் இதயம் உனையன்றி யாருக்கு நான் என்னைத் தருவேன் இறைவா இறைவா இறைவா இறைவா |