காணிக்கைப்பாடல்கள் | -பலியாக என்னைத்தந்தேன் |
பலியாக என்னைத் தந்தேன் - நீ பரிசாக உன்னைத் தந்தாய் உள்ளதெல்லாம் கொடுத்தேன் - நீ உன்னையே அள்ளித்தந்தாய் கண்மணிபோல காக்கும் - உந்தன் கரத்தில் என்னை முழுதும் தந்தேன் என்னோடு ஒன்றாகினாய் - எல்லாமே உனதாக்கினாய் (பலியாக...) வாழ்வென்பதோ வெள்ளைத்திரை - அதில் நிகழ்வென்பதோ நிழல் ஓவியம் - Music நிலையான உறவாக யாரும் இல்லை குலையாத நம்பிக்கை எதிலும் இல்லை நீயின்றி என் வாழ்வில் நிறைவேயில்லை நீ என்னில் வந்தாலே குறையேயில்லை - Music (பலியாக....) இருள் நீக்கிடும் ஒளி வெள்ளம் நீ - என் இதயம் தேடும் அருள் வள்ளல் நீ - Music உன் வார்த்தை ஒளி தீபம் எரிகின்றதே என் வாழ்வின் கீழ் வானம் சிவக்கின்றதே இருள் நீக்கி வளம் காணும் உறவாகவே அருள் ஈந்து உன் பாதம் சரணாகவே (பலியாக...) |