Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

காணிக்கைப்பாடல்கள்  -மலரென மனதினை திறந்து வைத்தேன்  
மலரென மனதினை திறந்து வைத்தேன் - அதில்
மனமென இணந்திட உனை அழைத்தேன்
உளமெனும் அகலினில் உனை வளர்த்தேன் அங்கு
உய‌ர்ந்திடும் சுட‌ரினில் எனைய‌ளித்தேன்

பால்நிற‌ம் ப‌டைத்த‌ வெண்ம‌ழ‌லை உள்ள‌ம் -வீணே
கார் நிழ‌ல் கொண்ட‌து கால‌த்தினால்
காவ‌லா க‌ள்ள‌மெல்லாம் க‌ழித்து -இன்று
கோல‌மிடும் உந்த‌ன் திருவுருவை-2

அக‌த்தினில் ஆல‌ய‌ம் அமைத்திடுவேன் -அங்கு
உக‌ந்த‌தோர் ப‌லியினை ந‌ட‌த்திடுவாய்
த‌லைவ‌னே உள்ள‌மெல்லாம் நிறையும்- உந்த‌ன்
ப‌லியுட‌ன் க‌ல‌ந்து யான் உய‌ர்ந்திடுவேன்-2

அழித்திடு ம‌ன‌தினுக் க‌மைதியையே- என்றும்
விழைந்து யான் விரைந்த‌ன‌ன் உன‌த‌க‌மே
அண்ண‌லே வெள்ள‌மென‌ப் ப‌ருகும்- அருள்
புண்ணிய‌ சுனையினில் ப‌ருகிடுவேன்-2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்